×

காய்கறி நேற்றைய விலை நிலவரம் (1 கிலோ) சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் ‘உழைப்போம் உயர்வோம்’ கருத்தரங்கம்

சீர்காழி, டிச.23: சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் இன்று “உழைப்போம் உயர்வோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் தொழிலாளர் மருந்தகத்துறை இயக்குனர் டாக்டர்.ஜெயராஜமூர்த்தி கலந்து கொண்டு, இவர் உழைப்பு மற்றும் உயர்வை பற்றிய சிறப்புரையில் முயற்சி திருவினையாக்கும் என்று மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்தார். உழைப்பிற்கு உழைப்பால் உயர்ந்தவர்கள் நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். உழைப்பு என்பது எண்ணம் சார்ந்தது. நம் எண்ணத்தில் என்ன நினைக்கிறோமா அதனை திரும்ப திரும்ப நினைத்து மெல்ல மெல்ல செயல்படுத்தும்போது அங்கு உழைப்பு வலுபெற்று உயர்வைத் தருகிறது. தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் 100 வயது வரை சிறப்பாக வாழ்ந்தனர். அதற்கு அவர்கள் தமிழ் மீதுகொண்ட அதீத ஆர்வமே காரணம். ஒரு நிறுவனத்தின் மீது ஆர்வமுடன் கூடிய எண்ணம் திரும்ப திரும்ப வரும்பொழுது அங்கு உழைப்பு தானாக மேம்பட்டு வெற்றியை தருகிறது. என்று மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். இவ்விழாவிற்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் ஆனந்த் தலைமையேற்றார். கல்வி நிறுவனங்களின் செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். இவ்விழாவில் அனைத்து கல்லூரி முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சங்கர் நன்றி கூறினார்.

கத்தரிக்காய்    ரூ.130
தக்காளி     50
வெண்டைக்காய்     90
அவரைக்காய்     110
கொத்தவரை     70
முருங்கை     100
முள்ளங்கி    60
புடலை     80
பாகல்     80
வாழைக்காய்    30
வாழைப்பூ    10
பரங்கி    25
பூசணி    25
சுரை    ரூ.40
மாங்காய்     50,60
தேங்காய்    15,20
சின்னவெங்காயம்     50,60
பெரிய வெங்காயம்    40,50
பீன்ஸ்    80
கேரட்    90
பீட்ரூட்    80
உருளை     40
சவ்சவ்     50
கோஸ்     60
பச்சைமிளகாய்     50
புளி     130,140
பெட்ரோல் லிட்டர்: ரூ.102.88
1 கிராம் .... ரூ.4,540
1 பவுன் .... ரூ.36,320
டீசல் லிட்டர்: ரூ.92.92

Tags : Isaac Newton ,
× RELATED சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் உலக போதை பொருள் ஒழிப்பு தினம்